• Dec 29 2024

ஆண்டவரின் படக் கதையை தட்டித்தூக்கிய தளபதி விஜய்! அதகள அப்டேட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படும் ஒரு படம் தான் கோட். இந்த படத்தில் விஜய் அப்பா- மகன் என  இரண்டு கேரக்டரில் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்புகள் யாவும் நிறைவு பெற்றதாகவே கூறப்படுகின்றது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அதோடு கோட் படத்தில் மீண்டும் சினேகா விஜயின் காம்போ வெற்றி கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

இதைத்தொடர்ந்து விஜயின் 69 ஆவது படம் பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அதில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் அதற்கு பின்பு அவர் இல்லை  எனக் கூறப்பட்டது.


இந்த நிலையில் நடிகர் விஜயின் 69 ஆவது படம் பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் விஜயின் 69 ஆவது கதை பற்றி முதலில் கமலஹாசனுக்கு கூறப்பட்டது. அது கமலஹாசனின் 233 வது படமாக இருக்கும் என கூறப்பட்ட போதிலும் அந்த படம் டிராப்பானது.

அதன் பின்பு இந்த கதையை நடிகர் விஜய் தனது 69 ஆவது படத்திற்கு ஓகே பண்ணினார். விஜய்க்கு 69 ஆவது படமாக மட்டும் இல்லமால் எச்.வினோத், கமலஹாசனுக்கும் ஏற்புடைய கதையாக  இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement