• Dec 26 2024

மாமியாருக்கு ஷார்ப்பா பல்பு கொடுத்த பாக்கியா! தலைகீழாக மாறிய ராஜியின் கல்யாண வீடு?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ராஜிக்கு காபி கொண்டு போக, அங்கு ராஜியை காணவில்லை. எல்லாரும் பதற்றத்தோடு தேடி அலைகிறார்கள்.

மறுபக்கம், ஜெனி செழியனுக்கு, என்ட குழந்தையை குடுத்துடு பிளீஸ் என கெஞ்சி வாய்ஸ் போடுகிறார். பாக்கியாவும் போன் பண்ணி, பாட்டிகிட்ட சொல்லாம குழந்தைய கூட்டிட்டு வா என சொல்கிறார்.

ராஜி வீட்டில் ராஜியை காணோம் என தேட, வீட்டில் இருந்த நகையையும் காணவில்லை என தெரிகிறது. எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் தேட, ராஜி காரில் ஒரு பையனோடு போன விஷயம் தெரியவருகிறது. இது பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வர, அவரது பிள்ளைகளும் ராஜியை தேட புறப்படுகின்றார்கள்.

இதையடுத்து, ராஜியும் கண்ணனும் பாக்கியா இருக்கும் ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு, நாங்க அப்பா கிட்ட போய் சொல்லுவோம், இது எனக்கு தப்பா தெரியுது என ராஜி சொல்ல, கண்ணன் ரொம்ப ஓவரா பண்ணாத என திட்டுகிறார்.

இதை தொடர்ந்து, ராஜி ஓடிப்போன தகவல் தெரிந்து ஊரார், உறவினர் எல்லாரும் தப்பு தப்பாக பேசுகின்றனர். அதனை பார்த்து சக்திவேல் ரொம்பவும் கோவப்படுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement