• Dec 26 2024

Jr NTR முன்னிலையில் அசிங்கப்பட்ட அனுபமா! சக்சஸ் மீட்டில் விரட்டியடித்த ஆடியன்ஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான டில்லு ஸ்கொயர் என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இதுவரையில் 103 கோடி வரை வசூலித்து உள்ளது.


இந்த நிலையில், 'டில்லு ஸ்கொயர்' படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக சக்சஸ் மீட் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த தருணத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டுள்ளது. இது திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


அதாவது, இந்த படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் திரிவிக்ரம் மற்றும் ஜூனியர் என்டிஆர் பங்கேற்று உள்ளதுடன்,  அவர்கள் அனுபமாவை பாராட்டி உள்ளார்கள்.


இதன் போது அனுபமா மேடை ஏறி பேசும் போது அங்கிருந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். அதற்கு நான் ஏதும் பேச வேண்டாமா என அனுபமா கேட்க, வேண்டவே வேண்டாம் என்று கைகளை அசைத்து வெளியே போகுமாறு காட்டியுள்ளனர்.

இதனால் அப்செட்டான அனுபமா ஜீனியர் என்.டி.ஆர் மற்றும் திரிவிக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மட்டும் நன்றியை சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்துள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement