• Dec 26 2024

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் காலமானார்... அதிர்ச்சியில் சினிமா திரையுலகம்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் இயக்குனர் ஆர்த்தி குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சொந்த ஊராக கொண்டவர் இயக்குனர் ஆர்த்தி குமார். சுரேஷ்குமார் என்கிற அவரது நிஜ பெயரை சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும்போது, ஆர்த்தி குமார் என மாற்றி வைத்துக் கொண்டார். இயக்குனர் ஆர்த்தி குமாருக்கு பிடித்தமான நடிகர் சத்யராஜ். அதனாலேயே, அவர் இயக்கிய படங்களில் சத்யராஜ்தான் ஹீரோவாக நடித்திருப்பார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அழகேசன், சவுண்டு பார்ட்டி ஆகிய படங்களை இயக்கிய மிகவும் பிரபலமானவர் ஆர்த்தி குமார்.


கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றிரவு உயிரிழந்திருக்கிறார். நேற்று முன்தினம் உடல்நலத்தில் பின்னடைவு சந்தித்த ஆர்த்தி குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்திருக்கிறார் இயக்குனர் ஆர்த்தி குமார். இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்த்தி குமாரின் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement