• Dec 26 2024

விஜயகுமார் பேத்திக்கு திருமணம்.. முதல் பத்திரிகை சூப்பர் ஸ்டாருக்கே..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த நடிகர் விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதல் பத்திரிகையை அளித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முன்பே திரையுலகில் பிரபலமாக இருந்தவர் விஜயகுமார். விஜயகுமார் ஹீரோவாக நடித்த ’மாங்குடி மைனர்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் காலப்போக்கில் ரஜினிகாந்த் பெரிய நடிகராகி சூப்பர் ஸ்டார் ஆன நிலையில், விஜயகுமார் வில்லன் மற்றும் அப்பா கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.



இந்த நிலையில் விஜயகுமாருக்கு அருண் விஜய் என்ற மகனும் வனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் என ஐந்து மகளும் உள்ளனர்.  இதில் அனிதா விஜயகுமார் மட்டுமே திரை உலகிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது மகள் தியா என்பவருக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. திலான் என்பவரை தியா திருமணம் செய்ய இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் தியாவுக்கு வரும் 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விஜயகுமார் தனது மகளுடன் சென்று முதல் பத்திரிகையை வைத்துள்ளார். 

ரஜினி இந்த திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement