• Dec 27 2024

முத்துவை விட்டுப் பிரிந்த மீனா? சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்! ரோகிணிக்கு ஆப்பு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சவாரி இல்லை என முத்துவின் நண்பர்கள் புலம்பி கொண்டிருக்க அங்கு வந்த முத்துவிடம் உனக்கு மட்டும் சவாரி வருது ஜாலியா இருக்கா என்று சொல்ல, முத்து கோபப்படுகிறார். அதில் ஒருவர் முத்துவிடம் 200 ரூபாய் கேட்க அதற்கும் கோவப்பட்டு கத்துகிறார் முத்து. இதனால் என்ன நடந்தது என்று கேட்க, மீனாவிடம் சண்டை போட்ட விஷயத்தை சொல்லுகிறார். இதனால் மீனாவுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து அவரை சமாதானப்படுத்துமாறு அட்வைஸ் பண்ணுகிறார்கள்.

இதனால் மீனாவுக்கு என்ன பிடிக்கும் என கேட்பதற்காக முத்து போன் பண்ணுகிறார். ஆனால் மீனா போனை ஆன்சர் பண்ணவில்லை. இதைத்தொடர்ந்து செல்வம் ஒரு ஹோட்டலுக்கு முத்துவை அழைத்துச் செல்கிறார்.

உப்பு புளி காரம் பட ப்மோஷனுக்காக அன்னம் மிஸ் ஹோட்டலுக்கு வந்து அங்கேயே முத்துவும் செல்வம் சாப்பிட்டுவிட்டு மீனாவுக்காக அங்கு செய்த ஸ்பெஷல் ஸ்வீட்டை வாங்கிக் கொண்டு செல்கின்றார்கள்.

விஜயா வீட்டில் மீனாவை காணல சமைக்கல என்று விஜயா புலம்பி கொண்டு இருக்க, முத்துவும் வந்து மீனாவை தேடுகிறார். அண்ணாமலை அவ வீட்டில் இல்லை என்று சொல்ல, மீனாவின் போனும் சுவிட்ச் ஆப் ஆக இருக்கின்றது. இதனால் போன ஆப் பண்ணி வைத்துவிட்டு மீனா ஊர் சுத்துகிறார் என விஜயா கரித்துக் கொட்டுகிறார்.


இதைத் தொடர்ந்து ரவி உட்பட ஒவ்வொருவரும் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்க, இன்னைக்கு சமையல் இல்லையா என மனோஜ் கத்திக் கொண்டிருக்கின்றார். இதனால் ஒருநாள் அவர் இல்லனா எல்லாரும் பட்டினி இருக்க வேண்டியதுதான். இப்போ புரியுதா அவ அருமை கோபப்படுகிறார் முத்து.

இதை அடுத்து விஜயா ரோகினியை கூப்பிட்டு மீனா இல்லைனா இந்த வீட்டில இந்த வேலையும் நடக்காதுன்னு நினைக்கிறாங்க. அதனால நீ இன்னைக்கு சமைச்சிடு என்று சொல்ல, எனக்கு ஓரளவுதான் சமைக்க தெரியும் என்று ரோகினி சொல்லுகிறார். அதுவே போதும் போய் என அனுப்பி வைக்கிறார் விஜயா.

அதன் பின் சீதாவுக்கு முத்து போன் பண்ணி மீனா ஏன் இன்னும் வரல அவகிட்ட போனை கொடு என்று சொல்ல, அக்கா இங்கே இல்லை என்று சொல்லுகிறார். மேலும் காலைல அம்மா போன் பண்ணும் போது அக்கா கோவமா பேசியதாகவும் சொல்ல, அப்படியா பூ கொடுக்க எங்கையும்  போயிருப்பா இன்னும் வரல அதனாலதான் கேட்டேன் என சொல்லி போனை வைக்கின்றார்.

இறுதியாக மீனா இவ்வளவு நேரம் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்ட எங்க போனான்னு தெரியலையே என்று மீனாவின் அப்பா ஃபோட்டோ முன்னாடி நின்று அவரது அம்மா கண்கலங்க, அந்த ஆள்தான் ஏதாவது பண்ணி இருப்பான். அதனால தான் அக்கா எங்கையோ போய்ட்டா என்று சத்யா சொல்லுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement