• Dec 27 2024

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முடிய போகிறதா... இந்த நடிகை வெளியேறுகிறாரா... குழப்பத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் ஹிட் அடித்துவிட்டால் அதே பெயரில் வேறொரு கதைக்களத்தில்  புதிய தொடர் வருவது வழக்கம். அப்படி மதியம் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஈரமான ரோஜாவே சீரியல் வெற்றியடைய 2வது சீசன் அதே பெயரில் வந்தது.


ஆரம்பத்தில் இருந்து நன்றாக ஓடிக்கொண்டிருந்த தொடர் இடையில் கொஞ்சம் டல் அடித்தது. கதைக்களமும், நடிகர்களும் மாறினார்கள். அதோடு இந்த தொடர் இயக்குனர் இறப்பு, புதிய இயக்குனர் என நிறைய மாற்றங்கள் நடந்துவிட்டது. தற்போது கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம் அமைந்து வருகிறது.


இந்த தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுவாதி, இவர் இந்த தொடர் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிவிட்டார் என்றே கூறலாம்.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் Something End Soon என பதிவு செய்துள்ளார். மொத்தமாக தொடர் முடியப்போகிறதா அல்லது இவர் சீரியலை விட்டு வெளியேற இருக்கிறாரா, அதற்காக தான் இப்படி பதிவு போட்டாரா என தெரியவில்லை.

Advertisement

Advertisement