• Dec 25 2024

விஜய் சேதுபதிக்கே தத்துவம் சொல்லி சூப்பர் ஸ்டேட்மெண்ட் கொடுத்த பெண் போட்டியாளர்?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்ட சுனிதா கொகோய், குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். இவர் பிக் பாஸ் மேடையில் ஏழாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். சுனிதா டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவராகவே தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். டான்ஸ் நிகழ்ச்சிக்காக மும்பை சென்ற சுனிதாவுக்கு சென்னையில் தனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழே தெரியாமல் சென்னையில் கொஞ்சி பேசும் தமிழால் தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கினார். இவர் பேசும் தமிழுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் பேசினாலே சிரிப்பலை தான் காணப்படும். அதை தனது பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார் சுனிதா.

ஜோடி நம்பர் ஒன்றில் தனது டான்ஸ் திறமை வெளிபடுத்தி பேமஸானார். அதன் பின்பு தனுஷ் நடித்த 3, இரவு, ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 மற்றும் மான் வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட போது விஜய் சேதுபதிக்கு தத்துவம் கூறியுள்ளார் சுனிதா. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், ஒரு டான்ஸ் ஷோவில் நடுவராக இருந்தேன். இப்போ பிக் பாஸ் சுனிதாவாக என்று ஆகப் போகின்றேன். உங்களுடைய ஆதரவு எனக்கு வேணும். கேம்ல நீங்க 100 அடிச்சாலும் அடுத்த கேம்ல சைவர்ல இருந்துதான் ஆரம்பிக்கணும். அதேபோலத்தான் என்னுடைய வாழ்க்கையில எல்லா ஸ்டேஜ்லையும் சேலஞ்ச் இருந்துச்சு. அந்த சேலஞ்சர் பிக் பாஸ் வீட்டில் ஹாப்பியா சந்திக்க போறேன்.

சுனிதாவின் கருத்துக்கு தனது பாராட்டை தெரிவித்தார் விஜய் சேதுபதி. மேலும் கேம்ல 100 அடிச்சாலும் அடுத்த போட்டியில் சைவர்ல இருந்துதான் ஆரம்பிக்கணும் என்று மறுபடியும் சுனிதா சொல்ல கேட்டார். அத்துடன் விஜய் சேதுபதியை வெட்கப்பட வைத்ததோடு அவருக்காக கவிதையும் சொல்லியுள்ளார். இதனால் சுனிதாவிடம் இல்லாத டேலண்ட் இல்லை என்றும் இவர் முக்கிய போட்டியாளராக இருப்பார் என்றும் விஜய் சேதுபதி பாராட்டி உள்ளார்.

Advertisement

Advertisement