• Dec 26 2024

கனமழையில் படுத்தே விட்ட வேட்டையன்.. மொத்தமா சரிந்த வசூல் வேட்டை நிலவரம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் கமர்சியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் ரஜினிகாந்தின் அடுத்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.  ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மட்டும் சுமார் 650 கோடிகளை வசூலித்து இருந்தது.

இதை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை விட வாரி குவிக்கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பெயரே  ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பை கூட்டியது.

மேலும் வேட்டையன் படத்தில் வரும் குறி வச்சா இரை விழணும்  என்ற வசனம் இணையத்தில் வைரலானது. அத்துடன் இந்த படத்தில் அமிர்தாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி, ரக்சன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி 13 நாட்களை கடந்த நிலையில் இந்த படத்தின் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நான்கு நாட்களில் ரூபாய் 240 கோடிகளை அள்ளிய வேட்டையன் அதன்பின்பு தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக படம் பார்க்க யாருமே தியேட்டருக்கு செல்லவில்லை. இதனால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.


மேலும் வேட்டையன் படத்தின் வசூலை பாதிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் நடந்து கொண்டதற்கு காரணமே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுத்தான் என கூறப்பட்டது. மேலும் கோட் படத்தின் ரிலீஸின் போது  ரஜினிகாந்தின் ரசிகர்களும் கோட் படத்தின் வசூலுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.

தற்போது வேட்டையன் படத்தின் முதல் நான்கு நாட்கள் வசூலுக்கு  பிறகு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பில் படக்குழு எதுவுமே தெரிவிக்கவில்லை. தற்போது 13 நாட்களில் வேட்டையன் திரைப்படம் சுமார் 325 கோடிகள் முதல் 328 கோடிகள் வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதன்படி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் 13 வது நாளில் ஐந்து கோடிக்கும் குறைவான வசூலை பெற்று இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Advertisement

Advertisement