• Dec 26 2024

பாக்கியா குடும்பத்தில் ஒரே பிரச்சினை- திடீரென சீரியலை விட்டு விலகும் கோபி- பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்  பட்டாளமே காணப்படுகின்றது. கணவனைப் பிரிந்து வாழும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் எப்படியான பிரச்சினைகளை எதிர் கொள்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி பாக்கியா தன்னுடைய பிஸ்னஸை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபட்டு வருகின்றார். இது ஒரு புறம் இருக்க செழியனுக்கு ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதால் ஜெனியையும் செழியனையும் எப்படி சேர்த்து வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.


அத்தோடு எழிலின் மனைவி அமிர்தாவின் முதல் கணவன் மீண்டும் வந்து அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால்,பாக்கியா எழில் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றுவது என்ற பிரச்சினையிலும் இருக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியலட்சுதி சீரியலில் இருந்து கோபி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவர் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இதற்கு முதலும் கோபி சீரியலை விட்டு விலகுவதாக இருந்தார். 


ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே தொடர்ந்து நடித்து வருகின்றார். எனவே இனி வரும் நாட்களில் தான் கோபி என்னமுடிவு எடுப்பார் என்பது தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement