• Dec 27 2024

முதல் நாளே விஜயாவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. முத்து எடுத்த முடிவு!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் அம்மா விளக்கேற்றி வைத்து விஜயாவின் நடனப்பள்ளியை ஆரம்பித்து வைக்கின்றார். அதன்பின் விஜயா பரதநாட்டியத்தில் குரு வணக்கம் வைத்து ஆடிக்காட்டுகின்றார். எல்லாரும் போனதும் ஒரு நூறு அட்மிஷன் வந்துட்டா போதும் என காத்திருக்க மளிகை சாமான், தண்ணி கேன் போடுறவன் என்று ஒவ்வொருத்தராக வர ஏமாற்றம் அடைகிறார் விஜயா.

இதைத் தொடர்ந்து பார்வதியின் வீட்டுக்கு ஈபியில் இருந்து வந்திருப்பதாக சொல்லி, இனிமேல் இது கமர்சியல் ஏரியா. நீங்க வழமையா கட்டுற பில்லை விட மூன்று மடங்கு அதிகமாக கரண்ட் பில் கட்ட வேண்டும் என்று அதிர்ச்சி கொடுத்து கிளம்பி செல்லுகிறார். இதனால் பார்வதி புலம்பி கொண்டு இருக்க, விஜயா பசங்க சேர்ந்தா போதும் நிறைய சம்பாதிக்கலாம் நான் கட்டுகிறேன் என்று சமாளிக்கிறார்.

அதன்பின் ஒருவர் இங்கு கிளாஸ் எடுக்கிறீர்களா என்று கேட்க,,, பார்வதி மீண்டும் யாராவது பில்லு கட்ட சொல்லுவாங்களோ என்று பயந்து அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லுகிறார். இதனால் மகளுடன் வந்தவர் கிளாஸ் எடுக்கலையாம்  என்ற சொல்லி அவரை அழைத்துச் செல்ல, விஜயா ஓடிவந்து நான் தான் டீச்சர் கிளாஸ் எடுக்கிறன்  என்று சொல்ல, ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு பேசுறீங்க நாங்க வேற கிளாஸ் பார்க்கிறோம் என்று கிளம்பிச் செல்ல, விஜயா பார்வதி மீது கோபப்படுகிறார்.


இதை அடுத்து வீட்டுக்கு வந்த விஜயா  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சாப்பிடாமல் இருக்க அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க, நடந்தவற்றை சொல்லுகிறார். மேலும் முத்து வந்து 40 பேர் வருவாங்க 80 ஆயிரம் சம்பாதிப்பேன் என்று பெருமையாக பேசிட்டு இருந்தாங்க. இப்போ என்னாச்சு என்று கேட்க, இங்கு யாருக்குமே பரதநாட்டியத்தின்  அருமை தெரியலை என்று சொல்லுகிறார் விஜயா.

இறுதியாக எல்லாத்துக்கும் காரணம் மீனா தான் என்று மீனாவை திட்டி விட்டு செல்ல, ஒரு நாள் பூ விக்கல என்றாலே எனக்கு கஷ்டமா இருக்கும். அத்தைக்கும் அப்படித்தான் இருக்கும் என்று மீனா வருத்தப்படுகிறார். 

மறுநாள் காலையில் விஜயாவிடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்வதற்காக முத்துவும் மீனாவும் பூத்தட்டுடன் பார்வதி வீட்டு வாசலில் வந்து நிற்கின்றார்கள். இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகின்றார்.

Advertisement

Advertisement