• Dec 26 2024

மொத்த குடும்பமும் கோபிக்கு சேர்த்து வச்ச தரமான ஆப்பு! நடு வீட்டில் திணறும் பரிதாபம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோபி இந்த வீட்டில் இருக்கிறது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று செழியன் மற்றும் எழில் சொல்ல, எனக்கு சொல்ல நீங்க யாரு இது நான் கஷ்டப்பட்டு கட்டின வீடு என்று கோபி சொல்லுகிறார்.

இதை கேட்ட பாக்கியா அப்ப நான் சொன்னா போவீங்க தானே என்று கேட்க, நீ ரொம்ப திமிரா பேசுற என்று பாக்கியாவுக்கு பேச, அவரது பிள்ளைகள் பாக்கியாவுக்கு சார்பாக கோபியை எதிர்த்து நிற்கின்றார்கள். இதனால் எங்க அம்மா சொன்னா தான் நான் போவேன் என்று கோபி சொல்லுகிறார்.


இதன் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் உன்ட பிள்ளைகள் உன்னை ஏதாவது பண்ண முதல் நீயாவே வெளியே போயிரு என்று ஈஸ்வரி சொல்லுகிறார். இதனால் அதிர்ச்சியாகி நிற்கிறார் கோபி.


ஆகவே தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் விடயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த நிலையில், எல்லோரும் அவரை வெறுத்து ஒதுக்க நினைக்கின்றார்கள். தற்போது எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு சொன்ன நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியேறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement