• Dec 26 2024

மீடியால இருக்கேன்னு சொல்லி ரொம்ப அசிங்கமா திட்டினாங்க...! பிரபல சீரியல் நடிகை உருக்கமான பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வேதா.

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1  நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார் ஸ்வேதா.


அதைத்தொடர்ந்து சின்னத்தம்பி வள்ளி கார்த்திகை பெண்கள் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்வேதா.

இந்த நிலையில் , தன்னுடைய கடந்த கால கசப்பான சம்பவங்களை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பகிர்ந்துள்ளார் ஸ்வேதா. இதோ அந்த உருக்கமான சம்பவம்:

எல்லாருமே நான் மீடியால இருக்கிறதால என்ன தப்பா பேசினாங்க காலேஜ்ல கூட எல்லாருமே அசிங்கமான  வார்த்தையால என்ன திட்டினாங்க எனக்கு அப்போ அதுக்கான அர்த்தம் கூட தெரில்ல  எனக்கு காலேஜ் போகவே விருப்பமில்லை அம்மா அப்பா கிட்ட போய்  சொல்லிடன்.


ஒரு நாள் நான்  காலேஜ் போறன்  காலேஜ்ல இருக்கிற சீனியர்ஸ் என்ன பார்த்து வழமையை மாதிரியே கெட்ட வார்த்தையால திட்டினாங்க.எனக்கு எங்க இருந்து தைரியம் வந்திச்சோ தெரில்ல நான் அவங்க முன்னாடி போய் உங்களுக்கு என்ன பிரச்சனை நீங்களா எனக்கு சாப்பாடு தாரிங்க? உங்களோட தங்கச்சிய இப்பிடி பேசுவீங்களானு கேட்டன்.அதுக்கு அப்றமா மன்னிப்பு கேட்டு  எல்லாரும்  எனக்கு ஆதரவா தான் பேச தொடங்கினாங்க அப்டீன்னு ரொம்ப தைரியமா சொல்லியுள்ளார் ஸ்வேதா.

Advertisement

Advertisement