• Dec 26 2024

இது ஒரு வாய்ப்பு... உட்றக்கூடாது! அசோக் செல்வனின் மிரட்டும் நடிப்பு! 'ப்ளூ ஸ்டார்' ட்ரெய்லர் எப்படி?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

'ப்ளூ ஸ்டார்' திரைப்படமானது இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 

குறித்த திரைப்படம் எதிர்வரும் 25-ம் திகதி வெளியாக உள்ளதோடு, இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகிய நடிகர்கள் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 


'ப்ளூ ஸ்டார்'  படத்தின் கதைக்களம் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.  


'ப்ளூ ஸ்டார்' படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அதன் ஆரம்ப காட்சியே கிரிக்கெட் மைதானம் தான். கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென துடிக்கும் எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள் அதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. 


மேலும், சாதாரண வாழ்க்கையில் இடம்பெறும் காதல், குடும்பம், கிரிக்கெட் விளையாட்டில் புறக்கணிப்பு, பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் நம்பிக்கை வார்த்தைகள் என்பவற்றை எடுத்துக் காட்டி ட்ரெய்லர் நிறைவடைகிறது.


Advertisement

Advertisement