• Dec 26 2024

மக்களுக்கு கண்ணே இல்ல... மணியை பற்றி பேச தகுதியே இல்ல... திருந்தாத மாயா... BIGG BOSS-7

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து ரொம்ப விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது மணி வின்னர் ஆகா கூடாது என Bully Gang கதைத்து கொண்டிருப்பதாக விசனம் தெரிவித்துள்ளார் ப்ரியா ரஞ்சித்.


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் செய்தி வாசிப்பாளர் ப்ரியா ரஞ்சித் தனது இன்ஸராகிராம் பக்கத்தில் மாயா திருந்திவிட்டார் என சொல்லும் நபர்களுக்காக இந்த பதிவு என வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.


அதாவது நேற்று இரவு மாயா ,அக்ஷயா, விக்ரம் கதைத்து கொண்டிருந்தார்கள். அப்போது மணி எப்படி வின்னர் ஆகலாம், மணி வின்னர் ஆகா கூடாது என மாயா கூறுகிறார். அதே போல விக்ரமும் மணி லவ் கண்டன் பண்ணி இவளோ தூரம் வந்து இருக்காரு இந்த மக்களுக்கு கண்ணே தெரியா இல்லையா ஒட்டு போடுறதுக்கு என்று மக்களை குறை கூறுகிறார். அதேபோல அக்ஷயாவும் மணி எல்லாம் வின்னர் ஆகுனா நான் எல்லாம் அவ்வளோதான் என்று சொல்கிறார்.


ஆனா சொன்ன இரண்டு பேரும் என்ன செய்தார்கள் பிக் பாஸ் வீட்டில் என்று தெரியவில்லை, ஏன்னா அவங்க விளையாட்டு பிக் பாஸ் வீட்டில் அப்படி இருந்தது என்று எனக்கும் சொல்லத்தான் ஆசை ஆனா அவங்க ஒன்னும் பண்ண இல்ல அதுனால நீங்க மணியை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்ல உங்கள எல்லாம் விட மணி எவ்வளோ பெட்டர் என்று கூறியுள்ளார்.      

Advertisement

Advertisement