• May 12 2025

திருமணத்திற்கு ஜோடி போட்டு வந்தமைக்கு காரணம் இது தானா..?

Mathumitha / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் தற்போது படவாய்ப்புகள் பெரிதும் குறைந்து இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயனின் "பராசக்தி " படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியாகிய "காதலிக்க நேரமில்லை " திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. 


இவர் தனது சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். விவாகரத்து பிரச்சினையுடன் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்திற்கு தனது நெருங்கிய நண்பி ஜெனிஷாவுடன் கைகோர்த்து வந்தமையினால் பல நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகினார்.


இந்த நிலையில் இவர் ஐசரி கணேஷின் வேல்ஸ் தயாரிப்பில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து முடித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜீனி எனும் இந்த படத்தினை புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளதுடன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்து நிறைவடைந்துள்ளதுடன் ஒரு சில காட்சிகள் மாத்திரம் ரிசூட் செய்யப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement