• Dec 25 2024

ஜீவாவின் கழுத்தை நெரித்த மனோஜ், ரோகிணி! மீனா தலையில் விழுந்த பேரிடி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், டிக்கெட் புக் பண்ண போன ஜீவாவிடம், அங்கிருந்த ஏஜென்ட் ஜீவா விசாரித்ததை சொல்லுகிறார். அதிர்ச்சியடைந்த ஜீவா இனி யார் வந்து கேட்டாலும் என் டிடைல்ஸ் கொடுக்க வேண்டாம் என சொல்லுகிறார். அவர் யோசித்துக் கொண்டே முத்து காரில் செல்கிறார்.

அதன்பின் பார்லருக்கு செல்ல வேண்டும் என சொல்ல, முத்து ரோகிணியின் பார்லருக்கு கூட்டிச் சென்று விடுகிறார். அதன்பின் முத்துவை போக சொல்ல அவர் கிளம்புகிறார்.

ஜீவா உள்ளே போனதும் ரோகிணி அவரை பார்த்து ஷாக் ஆகிறார். மேலும் அவரை உட்கார வைத்து போரின்ல இருந்து வந்திங்களா என்று கேட்க, அவரும் ஆமாம் கனடால இருந்து வந்தேன் என சொல்லுகிறார். மேலும் பெயரையும் சொல்லுகிறார். இதனால் ரோகினி நைசாக மனோஜ்க்கு போன் பண்ண, அவரும் அங்கு வந்து விடுகிறார். 


மறுப்பக்கம் மீனா கடைக்கு செல்ல, கவனிக்காமல் நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி விடுகிறார். மீண்டும் வந்து பார்க்கும் போது அங்கு பைக் இல்லை. அங்கிருந்த பிச்சைக்காரர் போலீஸ் கொண்டு சென்றதாக சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.

இன்னொரு பக்கம், மனோஜை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா, அங்கிருந்து போக கிளம்ப அவரை வைத்து மிரட்டுகிறார்கள். மேலும்  உண்மையா தானே லவ் பண்ணினான் ஏன் இப்படி செய்தா என மனோஜ் கேட்கிறார். மேலும் பணத்தை தருமாறு கேட்க, அது உன்கூட ஒரு வருஷம் இருந்தன் அதுக்கு சரியாகிட்டு என சொல்ல, ரோகிணி கண்டபடி கிழிக்கிறார்.

மேலும், போலீசாரை வரவழைக்க, அங்கு வந்த போலீசாரிடம் தன்னிடம் காசு கேட்டு மிரட்டுவதாக பொய் சொல்லுகிறார். ஆனாலும் உன் மேல 6 மாசத்துக்கு முன்னாடியே கேஸ் தந்துட்டாங்க என சொல்லி வாயை அடைகிறார்கள். ஆனாலும் அவர் போலீசாரையே மிரட்டுகிறார் ஜீவா. இது தான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement