• Dec 27 2024

’விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு வரமுடியாது என சொல்லும் த்ரிஷா.. என்ன காரணம்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கு இடையே அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் தற்போது த்ரிஷாவால் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம்விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில் கிளைமேட் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் நிதி நிலைமை காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நிதி நிலைமை ஓரளவு சீரடைந்த நிலையில் துனுஷியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அஜித் மற்றும் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தவுள்ள நிலையில் த்ரிஷா கால்ஷீட் கிடைக்கவில்லை என தெரிகிறது.



த்ரிஷா ஏற்கனவேதக்லைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு மோகன்லால் உடன் நடிக்கும் படம், நிவின் பாலி உடன் நடிக்கும் படம் மற்றும் சிரஞ்சீவி படங்களுக்கு அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்துள்ளதால்விடாமுயற்சிபடத்திற்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே த்ரிஷா கொடுத்த கால்ஷீட்டை படக்குழுவினர் வீணடித்துவிட்டதால் தற்போது மீண்டும் கால்ஷீட் கேட்கும் போது அவர்களுக்கு த்ரிஷாவால்  கொடுக்க  முடியவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அஜித்தே த்ரிஷாவிடம் நேரடியாக கேட்டுக் கொண்டதால் அவர் ஒரு சில படப்பிடிப்புகளை அட்ஜஸ்ட் செய்துவிடாமுயற்சிபடத்திற்காக கால்ஷீட் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்விடாமுயற்சிபடத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரம் துனுஷியாவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பை ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement