• Dec 25 2024

குடுத்த கேரக்டர் பண்ண வக்கில்ல.. பக்கத்துல உக்காந்தா லவ்வா? கொந்தளித்த சவுண்டு

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 38 வது நாள் ஆகின்றது. இது வரையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நடிக்கின்றார்களா? இல்லை நிஜமாகவே அவர்களது கேரக்டர் அதுதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு செயல்பட்டு வருகின்றார்கள். இதனால் இந்த சீசன் ரியல் ஆகவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே அனுப்பப்பட்ட 18 போட்டியாளர்களும் சரியான கண்டென்ட் கொடுக்கவில்லை. இதனாலையே ஒரு மாதத்திற்குள் அடுத்த ஆறு பேரை களம் இறக்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே இருந்த போட்டியாளர்களை விட இருக்கும் இடம் தெரியாமல் காணப்பட்டார்கள்.


ஆனாலும் பழைய போட்டியாளர்களுக்கும் புதிய வைல்ட் கார்ட் என்ட்ரிகளுக்கும் இடையே ஒருவித மோதல் காணப்பட்டது. மாறி மாறி இரு டீமுக்கு உள்ளேயும் போட்டி, பொறாமை காணப்பட்டதோடு நேரடியாகவே அவர்களை தாக்கியும் பேசியிருந்தார்கள். ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சண்டை எதுவும் வெடிக்கவில்லை.


இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான நான்காவது ப்ரொமோவில் ரசிகர்களுக்கு விருந்தாகும் வகையில் தரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. அதன்படி பக்கத்தில் உட்கார்ந்தாலே லவ்வா என  சவுந்தர்யா வெறி பிடித்தவர் போல கத்திக் கூச்சலிடும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ரணகளப்படுத்தியுள்ளது.


அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போலவே இந்த முறையும் ஸ்கூல் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் வைஸ்  பிரின்ஸ்பல் ஆக அருள் நடிப்பதோடு பள்ளி மாணவர்கள் மோசமாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இது ஸ்கூலா இல்லை டவர் பார்க்க? என கேட்கும் அளவுக்கு இந்த டாஸ்க்  எல்லை மீறி சென்று உள்ளது.

Advertisement

Advertisement