• Dec 26 2024

‘எதிர் நீச்சலில் கிடைத்த நெகட்டிவ் விமர்சனம்.. வாய்ப்பு கிடைக்காமல் தடுமாடுகிறாரா வேல ராமமூர்த்தி?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் எதிர்பாராத வகையில் திடீரென முடிவடைந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே அடுத்த வாய்ப்புகளை தேடி வரும் நிலையில் குணசேகரன் கேரக்டரில் நடித்த வேல ராமமூர்த்திக்கு இன்னும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குணசேகரன் கேரக்டரில் முதலில் ஜி மாரிமுத்து நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் காலமானதால் அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தார். முதலில் அவர் அந்த கேரக்டருக்கு செட் ஆகவில்லை என்று விமர்சனம் இருந்தாலும் அதன் பின்னர் அவர் தனது அனுபவம் நடிப்பின் மூலம் குணசேகரன் ஆகவே மாறி நடித்தார் என்பதும் அதன் பின்னர் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவித்தது என்பது தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் குணசேகரன் கேரக்டரால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் இமேஜ் ஏற்பட்டதாகவும் திரையுலகினரும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

’எதிர்நீச்சல்’ சீரியலில் வேல ராமமூர்த்தி கமிட் ஆவதற்கு முன்பாக வருடத்திற்கு குறைந்தது 4 அல்லது 5 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு 6 படங்களிலும் 2022 ஆம் ஆண்டு 4 படங்களிலும் 2023ஆம் ஆண்டு 6 படங்களிலும் நடித்த அவர் ’எதிர்நீச்சல்’ சீரியலுக்கு பிறகு திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது. குணசேகரன் கேரக்டர் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் கொடுத்ததால் தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் வேல ராமமூர்த்தி   சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இவ்வாறு நெகட்டிவ் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் குணசேகரன் கேரக்டரால் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும், அவருடைய நடிப்பு திறமைக்கு இன்னும் பல வாய்ப்புகள் குவியும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement