• Feb 02 2025

தவெக கட்சியில் அதிரடியாக இணைந்த வெற்றி மாறன்..? மதுரையில் நடந்தது என்ன?

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட  நடத்தப்பட்டது.

இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் கொள்கை தொடர்பான தலைவர்களின் சிலையை திறந்து வைத்தார்.


இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டுள்ளார் அவருக்கு நிர்வாகிகள் மிகப்பெரிய மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றி மாறன் இணைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் அதன்பின் அதில் எந்தவித உண்மையும் இல்லை. அவர் விஜயின் கட்சியில் இணையவில்லை என்பது தான் உண்மை.

Advertisement

Advertisement