விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் வெற்றி வசந்த். இவர் ஆரம்பத்தில் பல கஷ்டங்களைக் கடந்து இன்று தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்றது. வைஷ்ணவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர்கள் காதலித்து வந்த நிலையில் திடீரென திருமண நிச்சயதார்த்தமும் விரைவிலேயே திருமணமும் நடைபெற்றது.
d_i_a
இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை சேர்ந்த பல பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தியிருந்தார்கள். அத்துடன் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் கலந்து கொண்டு கொண்டாடி இருந்தார்கள்.
இந்த நிலையில், வெற்றிவசந்த் - வைஷ்ணவிக்கும் இடம் பெற்ற ரிசப்ஷன் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிய வைரலாகி உள்ளன.
இதை பார்த்த பலரும் இந்த ஜோடி உண்மையிலேயே படுஜோராக உள்ளது என தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அதில் வெற்றி வசந்த் கருப்பு கோட் சூட் அணிந்திருக்க, வைஷ்ணவி மெல்லிய ஆரஞ்சு கலரில் சாரி கட்டி உள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!