நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
அந்த வகையில் சிறப்பு காட்சியை காண பலர் குவிந்தனர். அப்படி ஐதராபாத்தில் படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.
அத்தோடு இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பில் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் நடந்து வரும் நிலையில் இதற்கான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!