• Oct 05 2025

விஜய் சுயமாக பேசல, அவரை உசுப்பேத்தி பேச வைக்கிறாங்க..! திருமாவளவன் கருத்து!

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில்  41 பேர் உயிரிழந்த சம்பவம்  நாட்டையே உலுக்கியது. இதில் பத்து குழந்தைகள் 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் மௌனம் காத்த விஜய், நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டு, இப்படி ஒரு கடினமான சூழலை சந்திக்கவில்லை. . உண்மைகள்  விரைவில் வெளிவரும்..  சி.எம் சார் என்னை மட்டும் பழிவாங்குங்கள்... என  தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவுக்கு தற்போது பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இது தொடர்பில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி உள்ளார். 


அதில் அவர்  கூறுகையில், கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலால் மரணங்கள் நிகழ்ந்தது. ஒரு சதுர மீட்டரில் நான்கு ஐந்து பேர் மட்டுமே நிற்க வேண்டும். ஆனால் 10 - 15 பேர் திரண்டனர். 

பல மணி நேரம் மக்கள் காத்திருந்தனர். தற்காப்பு முயற்சி காரணமாக தப்பிக்க முயன்று,  கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் மிதித்து ஓடியதால் உயிரிழப்பு நடந்தது. இதுதான் உண்மை. இதை மறைத்து சதி என்று கூறி  திமுக அரசு மீது பழி சுமத்துவது ஆபத்தான அரசியல். இது விஜய்க்கு நல்லதல்ல.. 

விஜய் சுயமாக சிந்தித்து பேசவில்லை. அவர்களை சுற்றி உள்ளவர்கள் குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ்  தொடர்புடையவர்கள் உசுப்பேற்றித் தான் பேச வைக்கின்றனர்.  விஜய் சுயமாக சிந்தித்துப் பேசினால் மட்டுமே அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உண்டு  என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement