• Dec 27 2024

விஜய் டிவி பிரபலத்திற்கு பெண் குழந்தை பிறந்தது! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2  சீரியலில் அண்ணியாக நடித்தவர்தான் நிகாரிகா. இவர் வித்யா நம்பர் ஒன்,  வேலைக்காரர் போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார்.

இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் டைட்டில் பெற்றார். இவருடைய கணவர் இயக்குனர் ரஞ்சித் ஆவார். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்கள்.


சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை தனது ரசிகர்களுக்கு வெளியிட்டிருந்தார். இதற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில் தற்போது நிகாரிகா - இயக்குனர் ரஞ்சித் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement