• Dec 25 2024

தெலுங்கு ரீமேக் தொடரை புதிதாக களமிறக்கும் விஜய் டி.வி! 'நீ நான் காதல்' ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே  இருப்பார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, புதிய தொடரான 'நீ நான் காதல்' அடுத்து வரும் நவம்பர் 13 அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இன்றைய இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பு செய்கின்றனர்.

அந்த வகையில், தெலுங்கு சீரியலான நுவ்வு நேனு பிரேமாவின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இத் தொடர் தமிழில் 'நீ நான் காதல்' என்ற தலைப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்புக்கு தயாராகி வருகிறது.  


விஜய் டிவியில் ஏற்கனவே பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபலமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது 'நீ நான் காதல்' என்ற சீரியல் அந்த வரிசையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறது. 

குறித்த சீரியலில், காதல் கதையை மையமாக கொண்டு ஒரு தொழில் அதிபரைக் காதலிக்கும் ஒரு சிறிய நகரப் பெண்ணைச் சுற்றியே  அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ் மற்றும் நவீன் முரளிதர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எனினும் இத் தொடரில் அதிகமான புதுமுகங்கள் அறிமுகமாவதால் மக்கள் மத்தியில் எவ்வாறு வரவேற்பு கிடைக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Advertisement

Advertisement