• Dec 26 2024

மனோஜ் கேட்ட கேள்வியில் உண்மையை உளறிய விஜயா! அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி பாட்டிக்கு மேக்கப் போட்டு விட பாட்டி அவரது குடும்பத்தை பற்றி கேள்வி கேட்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி ஒருவழியாக பாட்டியை சமாளித்து மேக்கப் போட்டு விடுகின்றார்.

அதன் பின்பு அண்ணாமலை பரசுவின் மூலமாக இரண்டு ஐயர்களை வீட்டுக்கு வரவைத்து அம்பாளுக்கு சாத்தியக் புடவையை தனது அம்மாவுக்கு சப்ரைஸ் ஆக கொடுக்கின்றார்.

மறுபக்கம் முத்து யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்க, மீனா முத்து வராததால் வருத்தத்தில் காணப்படுகின்றார்.

இதைத்தொடர்ந்து பாட்டிக்கு மாலை போட்டுவிட்டு அனைவரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க, மீனா முத்து வந்ததும் வருகிறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க, நீ இன்னும் ரெடியா ஆகலையா? போய் ரெடி ஆகு என அனுப்பி வைக்கிறார் பாட்டி.

ஆனாலும் அந்த நேரம் பார்த்து வந்த விஜயா, நீ போய் சமையல் வேலையை பாரு என மீண்டும் துரத்தி விடுகின்றார். பிறகு மீனாவை கூப்பிட்ட பாட்டி உன் நகையெல்லாம் எங்க? விஜயா  இன்னும் கொடுக்கவில்லையா என்று கேட்க, அதையெல்லாம் ஏற்கனவே கொடுத்துட்டேன் என்று விஜயா சொல்கின்றார்.


இதனால் அந்த நகைய எல்லாத்தையும் போட்டுட்டு வா என்று பாட்டி மீனாவை அனுப்பி வைக்க, மனோஜ் விஜயாவிடம் அது எல்லாம் கவரிங் நகை என்று பாட்டி கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது என பயப்படுகிறார்.

அதன் பின் பார்வதி டிவி உடன் வீட்டுக்கு வர விஜயா அதை வாங்கி தான் அத்தைக்காக வாங்கி கொடுத்த கிப்ட் என பில்டப் கொடுக்கின்றார். இதனால் எல்லாரும் ஆச்சரியத்தில்  இருக்கும்போது நீங்க இப்படி செய்யறது சரி இல்ல.. என் கடையில் வாங்காமல் வேற கடையில வாங்கி இருக்கீங்க என மனோஜ் கேள்வி கேட்க, விஜயா அது பார்வதிக்கு தெரிந்த கடை என்று சமாளிக்க முயற்சி செய்கின்றார்.

ஆனாலும் மனோஜ் கேள்வி மேல் கேள்வியாக கேட்க, ஒருகட்டத்தில் விஜயா இது பழசுடா என்று உண்மையை உலறிவிடுகின்றார் விஜயா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

Advertisement

Advertisement