• Dec 26 2024

ஸ்ருதியை வெளுத்து வாங்கிய விஜயா... கணக்கு தெரியாமல் அசிங்கப்பட்ட மனோஜ்.. கோவப்பட்ட மீனா!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கிச்சனில் ரவி ஸ்ருதியின் நைட்டியை போட்டுக் கொண்டு டீ போட, விஜயா வந்து திருடி வீட்டுக்குள் புகுந்துட்டா என்று எல்லாரையும் கத்தி கூப்பிடுகிறார். அங்கு வந்த முத்து அவரை பிடித்துக் கொண்டு வர அது ரவி என தெரிந்து எல்லாரும் ஷாக் ஆகிறார்கள்.

அந்த இடத்திற்கு ஸ்ருதியும் ரவியின் லுங்கியை போட்டுக் கொண்டு வர, விஜயா கோபம் அடைகிறார். மேலும் நான் மூன்று ஆம்பளை சிங்கத்த பெத்து இருக்கன் விளையாட்டுக்கு கூட அவங்களுக்கு பொம்பள உடுப்பு போட்டது இல்லை என ஸ்ருதிக்கு பேசி செல்கிறார். அவர் போனதும் முத்து, மனோஜ், ரவி மூன்று பேரும் விளையாடி கொள்கிறார்கள்.

இதை அடுத்து மீனா கிச்சனில் இருக்க, முத்து வந்து நீ தான் எல்லா வேலையும் செய்யணுமா, என்று கேட்டு, விஜயாவிடமும் வீட்டுல இன்னும் இரண்டு பேர் இருகாங்க தானே அவங்களுக்கும் வேலையை கொடுக்க சொல்ல, அவங்க வேளைக்கு போறவங்க என்று சொல்லுகிறார். மேலும் ரோகிணியை அழைத்து என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்க, அவர் வெஜ் பிரியாணி என்று சொல்லுகிறார். அதனை செய்து கொடுக்குமாறு மீனாவிடம் சொல்லுகிறார்.


இதை கேட்ட மீனா மரக்கறி ஒன்றும் இல்லை என சொல்ல, அதையும் மீனாவை வாங்கி வருமாறு விஜயா சொல்ல, முத்து மனோஜை போய் வாங்கி வருமாறு சொல்லுகிறார். முதலில் மனோஜ் மறுக்க, நீ தானே பிசினஸ் பண்ண போறா நீ போய் வாங்கிட்டு வா என அனுப்புகிறார்.

இதையடுத்து அவர் நான்கு மரக்கறிக்கு நாநூறு ரூபா கொடுத்து வாங்கி வர, மீனா இவ்வளவு இருக்காதே என்று பேசிக் கொண்டு இருக்க, அங்கு வந்த கடை முதலாளி மெஷின் பிரச்சினை நூற்று தொண்ணுறு ரூபா தான் கணக்கு. இவரை கூப்பிட நிக்காம காரில் ஏறி வந்துட்டார் என சொல்லி காசை கொடுத்து போகிறார்.

அதன்பின் நாளைக்கு என்ன நாள் என்று அண்ணாமலை முத்துவிடம் கேட்க, மனோஜ் காச எடுத்துட்டு ஓடிப்போன நாள் என்று சொல்லுகிறார். அவருக்கு ஞாபகம் வராமல் இருக்க, மீனா கோவத்தில் செல்கிறார். அதன்பின் நாளைக்கு திருமண நாள் என்று சொல்ல, முத்து மீனாவை சமாதானம் செய்கிறார். இது தான் இன்றைய எபிசோட். 


Advertisement

Advertisement