• Dec 27 2024

6வது திருமணநாளை மிகவும் பிரமாண்டமாகக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா - வெளியாகிய போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் சற்று தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக கிட்டதட்ட சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.


அதனால் விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.


இவர் நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி  இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.


இதையடுத்து கடந்த ஜனவரி 2021ல் இந்த ஜோடிக்கு வாமிகா என்ற மகள் பிறந்தாள். திருமணத்திற்கு முன்பு காதலித்ததை விட திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.


தற்போது லண்டனில் இருக்கும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து தங்கள்து 6ஆவது ஆண்டு திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழந்துள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement