மதகஜராஜா திரைப்படம் வெளியானதில் இருந்து அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவராக விஷால் காணப்படுகிறார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாகி தற்போது மாபெரும் வெற்றி பெற்றுள்ளதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி படமாக மாறி உள்ளது.
மதகத ராஜா படத்தில் விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மீண்டும் சந்தானத்தை காமெடி கதாபாத்திரங்களிலேயே நடிக்கச் சொல்லி வேண்டுதல் விடுத்து வருகின்றார்கள்.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மதகஜராஜா சக்சஸ் மீட் கொண்டாட்டப்பட்டது. இதில் சுந்தர்.சி, விஷால், அஞ்சலி ஆகியோர் பேசிய விடயங்கள் கடும் வைரலானது.
மேலும் இதன்போது மீண்டும் சுந்தர். சியுடன் படம் பண்ணுவதற்காக விஷால் காத்திருப்பதாகவும், கௌதம் மேனன் உடனும் ஒரு படம் பண்ண உள்ளதாகவும் துப்பறிவாளன் 2 படம் பற்றியும் அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், விஷாலை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படம் விஜய் நடிப்பதாக இருந்த யோஹேன் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த கதையை கௌதம் வாசுதேவ மேனன் தற்போது விஷாலுக்கு ஏற்றது போல கதையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!