• Dec 25 2024

விஷால் அரசியலுக்கு வரணும்.. நிறைய சம்பாதிக்கணும்.. அதான் என்னோட ஆசை: அப்பா ஜிகே ரெட்டி பேட்டி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் நிறைய சம்பாதிக்க வேண்டும், அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும், சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும், அதுதான் ஒரு அப்பாவாக என்னுடைய ஆசை என விஷாலின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஷாலின் அரசியல், விஷாலின் திருமணம் மற்றும் அவர் செய்யும் சமூக சேவை குறித்து மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே விஷால் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் என்றும் பெரியவர் ஆகி நடிகர் ஆன பின்னர் கூட எனது மனைவி தேவி பெயரில் அறக்கட்டளை நடத்தி ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.


 தேவி அறக்கட்டளை மூலம் மாதம் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை உதவிகள் செய்யப்படுகிறது என்று கூறிய ஜிகே ரெட்டி, விஷால் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும், அதன் பிறகு சம்பாதித்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் விஷால் அரசியலுக்கு வரும் முன்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு அப்பாவாக என்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியலுக்கு வருபவர்கள் சம்பாதித்து வருவதை தான் பொதுமக்கள் பார்த்து வருகிறோம், ஆனால் விஷால் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஜிகே ரெட்டி கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement