• Dec 26 2024

விஜய்யின் ஃபார்முலாவை Follow பண்ணும் விஷால்..! கூட்டம் சேர்ந்துச்சா? புரட்சித்தளபதி ஆவாரா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் தேர்தல் இன்றைய தினம் 19ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் மாதம் முதலாம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் செலுத்தினார். இதன்போது வாக்குச் செலுத்துவதில் மரியாதை, கௌரவம் இருக்கிறது. தயவு செய்து அனைவரும் வாக்களித்து விடுங்கள் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார், பிரபு, கார்த்திக், குஷ்பூ, சசிகுமார், த்ரிஷா, ஐஸ்வர்யா, அதிதி, சங்கர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என அனைவருமே தமது வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள்.

அதேபோல நடிகர் விஜய்யும் இந்த தேர்தலில் பங்கேற்பாரா இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், கோட் பட ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி இன்றைய தினம் தனது வாக்கை அவரும் பதிவு செய்துள்ளார்.


நடிகர் அஜித் குமார் தான் முதன் முதலாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இவ்வாறு அனைத்து பிரபலங்களும் தமது ஜனநாயக கடமையை சரிவர செய்துள்ளார்கள்.

இந்த நிலையில்,  நடிகர் விஷால் சைக்கிளில் வாக்களிக்க சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது விஜய் தனது கட்சியை ஆரம்பித்ததன் பிறகு நடிகர் விஷாலும் தனது கட்சி பற்றி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அதேபோல 2026 ஆம் ஆண்டு போட்டியிடுவதாகவும் கூறியிருந்தார்.


கடந்த தேர்தலில் நடிகர் விஜய் கருப்பு நிற சட்டையில், சைக்கிளில் ஓட்டு போட வந்திருந்தார். அவரை தொடர்ந்து அவரது ரசிகர்களும் கூட்டமாக வந்து வாக்குகளை பதிவு செய்து போயிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது நடிகர் விஷாலும் விஜயின் ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் வகையில் எனது வாக்கை பதிவு செய்வதற்காக வாக்குச் சாவடி நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். இது தொடர்பிலான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement