• Dec 26 2024

இப்ப வருவேன், அப்புறம் வருவேன்னு ஏமாத்த மாட்டேன்.. ரஜினியை மறைமுகமாக தாக்கிய விஷால்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த பல ஆண்டுகளாக கூறிக் கொண்டிருந்த நிலையில் அதன் பின் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக ரசிகர்கள் மத்தியில் உறுதியாக கூறினார். அரசியல் கட்சி ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொண்டிருந்த நிலையில் தான் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து ரஜினியின் உடல் நலமும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தனது உடல் நலத்தை காரணத்தைக் காட்டி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அவரை கேலியும் கிண்டலும் செய்யாதவர்களை இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில் சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷாலும் ரஜினியை மறைமுகமாக தாக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். நான் அரசியலுக்கு வருவேன், வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன், அவர் சொன்னால் வருவேன் இவர் சொன்னால் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன், வரவேண்டும் என்று நினைத்து விட்டால் உடனே வந்து விடுவேன், 2026ல் நான் அரசியலுக்கு வருவேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் நான் அரசியலுக்கு வருவது சேவை செய்ய தானே ஒழிய பணம், புகழ் ஆகிவற்றை அடைவதற்காக இல்லை. இப்போது நான் செய்து கொண்டிருக்கும் சமூக சேவைகளை மேலும் விரிவு படுத்துவதற்கு ஒரு அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.  நான் அரசியலுக்கு வந்தால் என்ன கிழிக்க போகிறான் என்பதற்கு எனது செயல்கள் மூலம் பதிலடி கொடுப்பேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஷால் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம் என்றாலும் அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கியதை அடுத்து ரஜினி ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Advertisement

Advertisement