• Dec 26 2024

விஷ்ணு, தினேஷ், மணி மீது தொடர்ந்து வன்மத்தைக் கொட்டும் பிரதீப்! குடும்ப பெண்களை இழுத்து சர்ச்சைப் பதிவு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதன் இறுதியில் யார் டைட்டில் வின் பண்ணுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார் தான் பிரதீப். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது பைனலுக்கு சென்றுள்ள ஆண் போட்டியாளர்களை தொடர்ந்தும் சீண்டி வருகிறார் பிரதீப் ஆன்டனி.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள மணி, விஷ்ணு, தினேஷ் ஆகியோரை பன்றி என்று குறிப்பிட்டதோடு, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் பிரதீப்.

தற்போது குறித்த பதிவு வைரலாகி உள்ளது. ஆனாலும், குறித்த ஐடி பிரதீப் உடையது இல்லை, அவர் அவ்வாறு பதிவிட மாட்டார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement