• Dec 26 2024

ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் துன்புறுத்தினாரு, தயாரிப்பாளரால் சீரழிக்கப்பட்ட விஜே ப்ராவோ- இப்படியொரு சோகமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பதால் ஹவுஸ்மேட்ஸ் தமக்கிடையில் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமது வாழ்க்கையில் இடம் பெற்ற பூகம்பம் பற்றி ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் சொல்லி வருகின்றனர். இதனால் விஜே ப்ராவோவும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஸ்டமான விசயம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


என் கண்ணு முன்னாடி தான் எங்களுடைய அப்பாவின் உயிர் போனது, அப்பாவுக்கு தான் நான் டிவியில் வரனும் என்று ரொம்ப ஆசை,எனக்கும் பெருசா எதுவம் வரல என்று தான் சொல்லனும்.

ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்திச்சு,ஒரு ஷோ தயாரிப்பாளர் ஒருவர் போன் பண்ணி உன்னை வைச்சு ஒரு விளம்பரம் பண்ணனும் நீ வாதம்பி என்றாரு. எனக்கு அவரு யார் என்று தெரியாது, நானும் நம்பிப் போய்ட்டேன்.ஹாட்டல் ரூமுக்குள்ள வைச்சு என் சட்டை எல்லாம் கிழிக்க ஆரம்பிச்சிட்டாரு.

எனக்கு என்ன பண்றது என்று தெரில, கை எல்லாம் விறாண்டி, வாய்ப்புக்காக நாம இப்பிடி சீர் கெட்டு போய் நிற்கிறோம் என்று இருந்திச்சு. ஒரு மாதிரி ரூமை விட்டு வெளில வந்திட்டேன். சட்டை இல்லாமல் ஜீன்ஸ் எல்லாம் கிழிஞ்சு,எனக்கே என்னை பார்க்க அசிங்கமாக இருந்திச்சு.


அதனால தான் நாட்டை விட்டே  துபாய்க்கு ஓடினேன். இப்ப வரைக்கும் யாராவது ஆண்களை தனியாகப் பார்த்தால் எனக்கு ரொம்பவே பயமாக இருக்கும். என்னோட வாழ்க்கைல நடந்த பூகம்பம் இது தான் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement