• Dec 26 2024

வனிதாவை தாக்கியது அவருக்கு நெருக்கமானவர்களா? சந்தேகத்தை கிளப்பிய சம்பவம்! பயில்வான் பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார் என்று கூறப்பட்ட நிலையில்,  விஜே ப்ராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

மேலும், கடந்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு எவிக்டாகிச் சென்ற, விஜய் வர்மா,அனன்யா ஆகிய இருவரும் மீண்டும் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே வந்துள்ளார். 

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸியமாகப் போய்க் கொண்டிருந்தாலும் போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட விடயம் தான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளது.


இந்நிலையில், தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டார் என்று வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தனது கன்னம் வீங்கியது போல புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், தற்போது நள்ளிரவில் தன்னை தாக்கியவர்கள் மீது வனிதா ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், 


'நள்ளிரவில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாக்கியதாக வனிதா கூறியுள்ளார். அவரின் கண் வீங்கும் அளவிற்கு ஒருவர் தாக்கி இருக்கும் போது அதுகுறித்து வனிதா ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால், விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து அவருக்கு அழைப்பு போய் உள்ளது.

இதில், எனக்கு என்ன சந்தேகம் என்றால், தாக்கியவர்கள் மீது புகார் கொடுக்காதது ஏன், தெரிந்தவர்கள் தாக்கியதால் விவகாரம் பெரிதாகிவிடும் என்பதற்காக வனிதா புகார் கொடுக்கவில்லையா? மேலும், என்ன ஆச்சு என்று விசாரிக்க போன் செய்தவர்களிடம் இதுபற்றி பேசாதீங்க என்று கூறி தொலைபேசியை ஆப் செய்துவிட்டார்'  என வீடியோ ஒன்றில் தனது கேள்வியை முன்வைத்துள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement