• Dec 25 2024

வி ஆர் தி பிக் பாஸ் பாய்ஸ்.... RJ ப்ரோவோ வெளியிட்ட வீடியோ! யாரெல்லாம் சந்திச்சு இருங்காங்க தெரியுமா? வேற லெவல் ஸ்டைலில் கூல் சுரேஷ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, அண்மையில் நிறைவுக்கு வந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7.

இதன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றி, அட்டகாசமாக விளையாடி வந்த போதிலும், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் கலக்கத்துடன் எவிட்டாகி வெளியேறி இருந்தார்கள்.

இதை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காததால் பிக்  பாஸ் வரலாற்றில் முதன்முறையாக 5 வைல்ட் கார்ட் எண்ட்ரிகள் நுழைந்தனர்.


இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு ஆட்டமே கைமாறியது எனலாம். இடையில் இடம்பெற்ற பிரதீப்பின் ரெக்கார்ட் விவகாரமும் பிக் பாஸ் சீசன் 7 ஐ மேலும் விறுவிறுப்பாக்கியது.

இதன் இறுதியில் பிக் பாஸ் சீசன் 7  டைட்டிலுக்காக அர்ச்சனா, மாயா, மணி சந்திரா, விஷ்ணு, தினேஷ் ஆகியோர் கடும் போட்டியாக காணப்பட்டனர்.


அதன்படி பிக் பாஸ் டைட்டிலை விஜே அர்ச்சனா வெற்றி பெற, மணி சந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் அடுத்தடுத்த ரன்னர் ஆக அறிவிக்கப்பட்டார்கள்.

இதை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தற்போது தமது ரசிகர்களை சந்தித்து ஒரு சில youtube சேனல்களுக்கு  பேட்டியளித்து வருவதோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது ஆர்ஜே ப்ரோவோ, தினேஷ், விஷ்ணு மற்றும் கூல்  சுரேசை சந்தித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement