• Dec 26 2024

விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் என்ன ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் ரசிகர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் விஜய் ஆண்டனி.தொடர்ந்தும் பாடகர்,நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்ட விஜய் ஆண்டனி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மழையில் நனையும் 'மழை பிடிக்காத மனிதன்'... கவனம் ஈர்க்கும் விஜய் ஆன்டனி |  nakkheeran

இறுதியாக  இவர் நடிப்பில் வெளியான "ரோமியோ" திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றபோதும் வர்த்தக ரீதியாக வெற்றிப்படமாகவே அமைத்திருந்தது.தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் "மழை பிடிக்காத மனிதன்".

மழையில் படப்பிடிப்பு நடத்தும் 'மழை பிடிக்காத மனிதன்' படக்குழு | nakkheeran

விஜய் ஆண்டனியுடன் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ் என பல நட்சத்திரங்கள் கைகோர்த்திருக்கும் இத் திரைப்படமானது வருகிற மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட இப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement