• Dec 26 2024

ஆதிக் படத்தில் அஜித் நடிக்க பிரபு மகள் தான் காரணமா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும்  அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ என்ற படம் தான் அஜித்தின் அடுத்த படம் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் தான் ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து அஜித் வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுவது தவறு என்றும் அதற்கு முன்பே ஆதிக்  மீது அஜித்துக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் ஆதிக்  ரவிச்சந்திரன் பணிபுரிந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் அப்போதே அவர் அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்த ஒரு கதையை கூறிய போது ’கதை நன்றாக இருக்கிறது, காலம் வரும்போது சொல்கிறேன்’ என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தான்  விக்னேஷ் சிவன் படம் டிராப் ஆனபோதே ஆதிக் ரவிச்சந்திரனை தான் அஜித் தேர்வு செய்திருந்தார் என்றும், ஆனால் அவர் அப்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் அப்போது அவரால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு தான் ’விடாமுயற்சி’ படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் ஆதிக்கின் ஒரு சில நடவடிக்கை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் குறிப்பாக தன்னுடைய வெறித்தனமான ரசிகராக இருப்பதை அறிந்த அவர் அவரை குறித்து விசாரித்த போது அவர் பிரபு மகளை திருமணம் செய்தது அஜித்திற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சிவாஜி வீட்டின் மேல் எப்போதும் மரியாதை வைத்திருக்கும் அஜித்,  பிரபு மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றபோது மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஐஸ்வர்யாவை ஆதிக்  திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர் மீது கூடுதல் மரியாதை அஜித்துக்கு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தான் அவருக்கு திருமண பரிசாக தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவருக்கு ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை கொடுத்ததாகவும் அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement