• Dec 26 2024

ஒரே ஒரு சூப்பர் ஹிட் படம்.. கோடிக்கணக்கில் சம்பளத்தை கூட்டிய மமிதா பைஜூ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை மமிதா பாஜு மலையாளத்தில் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியானபிரேமலுஎன்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த ஒரே படத்தின் வெற்றி காரணமாக அவர் பல மடங்கு சம்பளத்தை அதிகரித்து விட்டதாக கூறப்படுவது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மமிதா பாஜு  நடித்தபிரேமலுதிரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உள்ளது என்பதும் தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.
 
மேலும் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் டப் செய்து வெளியிட்டுள்ளதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக நஸ்லென் என்பவர் நடித்த நிலையில் அவருக்கு ஏற்கனவே மூன்று படங்கள் புக் ஆகியுள்ளது.



 இதனை அடுத்து இந்த படத்தின் நாயகியான மமிதா பாஜு தற்போது தமிழிலும் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் உடன் மமிதா பாஜு நடித்த 'ரிபெல்என்ற திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் அவருக்கு தமிழில் மூன்று படங்கள் புக்காகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்பிரேமலு’  திரைப்படத்திற்காக அவர் வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது தமிழ் படங்களில் நடிக்க அவர் ஒரு கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு வெற்றி காரணமாக கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் மமிதா பாஜு வை பார்த்து தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் சென்சேஷனல் ஹீரோயின் என்பதால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க சில தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மலையாளத்தில் நடித்து வரும் மமிதா பாஜு முதல் படத்தில் 3 லட்ச ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும் அதனை அடுத்து 5 முதல் 10 லட்சம் மட்டுமே அதிக படங்களின் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரே ஒரு வெற்றி அவரை கோடியில் மிதக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement