• Dec 26 2024

பெண்களை ஹீரோக்கள் கிட்ட இருந்து தான் காப்பாற்ற வேண்டும்! அர்ஜுனை சீண்டிய ப்ளூ சட்டை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா தொடர்பில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை தான் தற்போது இந்திய அளவில் மட்டும் இல்லாமல் இணைய தளத்திலும் பேசு பொருளாக காணப்படுகிறது.

இந்த விஷயம் தொடர்பில் மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் உட்பட விஷால், கார்த்தி, ஜீவா ஆகியோர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நைசாக நழுவி சென்றதை அவதானிக்க முடிந்திருந்தது.

கேரள விவகாரத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரளா நடிகர்கள் அனைத்து சினிமா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை இருப்பதாகவும் இந்த அறிக்கையால் தான் இந்த விவகாரம் கேரளாவில் வெளிவந்ததாகவும் சமாதானம் கூறி வருகின்றார்கள் .


இந்த விவகாரம் தொடர்பில் நடிகர் அர்ஜுன் கூறுகையில், உலகில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு இவ்வாறு உடல் ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றது. அனைத்து இடங்களிலும் சினிமா ஹீரோ சென்று காப்பாற்ற முடியாது. அனைவருக்கும் இந்த விஷயத்தில் பொறுப்புணர்வு வேண்டும். அப்பாவி பெண்கள் நிறைய பேர் பாதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் மூலமாக மட்டுமே நியாயம் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அர்ஜுனின் பேட்டியை தனது எக்ஸ் தல பக்கத்தில் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், அவர்களை காப்பாற்ற சொல்வதே  ஹீரோக்கள் கிட்ட இருந்து தான் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement