• Dec 26 2024

ஷிவானிக்கு போட்டியாக யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ.. வேற லெவல் வொர்க்-அவுட்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி கடந்த சில நாட்களாக ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருக்கு போட்டியாக நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்த் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் பதிவாகி வருகிறது.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து மறைமுகமாக வாய்ப்பை தேடுவார்கள் என்பதும் அந்த வகையில் பல நடிகைகள் வாய்ப்பை பெற்று உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உடனே திரையுலகில் பெரிய நடிகை ஆகலாம் என்ற கனவுடன் அந்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பெரும்பாலும் ஏமாற்றம் தான் அடைந்துள்ளனர். அதில் ஷிவானி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இரு நடிகைகளும் விதிவிலக்கு இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஷிவானி படு கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் அவருக்கு நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தற்போது வொர்க்-அவுட் செய்யும் கிளாமர் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இனியாவது அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காத யாஷிகா ஆனந்த், ஷிவானி பாணியை பின்பற்ற தொடங்கிவிட்டார். அவரும் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமர் வொர்க்-அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவாகி ஒரு சில மணி நேரங்களை ஆகியுள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது

Advertisement

Advertisement