• Dec 26 2024

யோகிபாபுவுக்கு ஜோடி வாணி போஜனா? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு சில முன்னணி நடிகைகள் ஜோடியாகவும் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக ’கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபு நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பதும் இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் ’சட்னி சாம்பார்’ என்ற வெப் தொடரில் யோகி பாபு நடித்த நிலையில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ’மொழி ’ உட்பட பல தரமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு, வாணி போஜன்,  'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘சிறகடிக்க ஆசை’ புகழ் ஆர் சுந்தர்ராஜன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.


Advertisement

Advertisement