• Dec 26 2024

விக்ரம் படத்துடன் முட்டிமோத தயாரான 3 படங்கள்.. பா. ரஞ்சித்துக்கு வைக்கப்பட்ட செக் ...?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இனி அடுத்து வரும் ஐந்து மாதங்களுக்கும் பெரிய ஸ்டார்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் காணப்படுகின்றார்கள்.

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றபோதும் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் 15 திகதி விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்துடன் இன்னும் மூன்று படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

அதன்படி பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ஆகிய படங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகின்றன.


அதே வேளை, கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பா. ரஞ்சத்தின் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படம் வெளியான போது அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படமும் ரிலீஸ் ஆனது.

அதேபோல தற்போது இந்த ஆண்டும் அதே திகதியில் பா. ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படமும், அஜய் ஞானமுத்துவின் டிமான்டி காலனி 2 படமும் போட்டிபோட்டு ரிலீஸாக  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement