சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புது வருட பிறப்பை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் 'நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிடமாட்டான்..' என்று ஒரு ட்விட் உடன் தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் வழமையாகவே சாதாரணமாக பதிவிடும் வாழ்த்துக்களுக்கும் இறுதியாக தெரிவித்த புத்தாண்டு வாழ்த்துக்கும் ஏதோ ஒரு உள் குத்து இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் வலைப்பேச்சு அந்தணன் டீம் தமது சேனலில் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளனர். குறித்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் இவ்வாறு ட்விட் இட்டதற்கு காரணம் விடாமுயற்சி ரிலீஸ் தேதி தள்ளிப்போனது தான்.. அதற்கு ஆறுதல் சொல்லும் வகையிலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி அவர்கள் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழமையாகவே தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது சாதாரணமாகவே தெரிவிப்பார். ஆனால் இறுதியாக புது வருட பிறப்பை முன்னிட்டு பாட்ஷா ஸ்டைலில் தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.
இந்த வாழ்த்துக்கு பின்னாடி உள்ள பின்னணி யாருக்குத் தெரியாவிட்டாலும் எங்களுக்கு தெரியும். அதற்கு காரணம் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது தான். அதற்கு அஜித்குமாருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் ஆறுதல் சொல்லும் வகையிலேயே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் அஜித் ரசிகர்கள் கவலையில் காணப்படுவார்கள். அதே போல மிகப் பெரிய நிறுவனமான லைக்கா நிறுவனமும் எடுத்து வைக்கும் முயற்சிகள் தடைப்படுவதாலும், ரஜினிகாந்துக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனாலும் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
Listen News!