• Apr 23 2026

'பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' ஜாய் கிரிசில்டாவின் வைரல் ஸ்டோரி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான சர்ச்சை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் பின்னர் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். 

மேலும், கர்ப்பமாக இருந்தபோது ரங்கராஜ் தன்னிடம் இருந்து விலகிவிட்டதாகவும் கூறி காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் புகார்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகக் கூறி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது.


மேலும், விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்கும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA) பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளத்தில் தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு, “Madhampatty Ragha Rangaraj” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில்,  “பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டதும் இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement