தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அளித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசிய கருத்துகள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.
அந்த பேட்டியில், “ஏன் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறீர்கள்? இவ்வளவு நாள் மின்சார பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருந்தீர்கள். இப்போது சில பிரச்சினைகள் வந்தால், ஒரு ஆறு மாதத்துக்கு பொறுத்துக் கொள்ள முடியாதா? தேவைப்பட்டால் என் வீட்டில் இருந்து மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து வைத்துள்ளேன்.” என்று கூறினார்.

மேலும், “மைக் முன்னால் நின்று ஏன் இப்படி நடந்தது என்று கேள்வி கேட்டால் உடனே உங்கள் வீட்டுக்கு மின்சாரம் வந்துவிடுமா? நீங்கள் கேள்வி கேட்பதை எப்போது நிறுத்துகிறீர்களோ, அப்போது தான் உங்களுக்கான பதில் கிடைக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
மாஸ்டர் மகேந்திரனின் இந்த கருத்துகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. சிலர் அவரது கருத்தை ஆதரித்து, தற்காலிக சிரமங்களை மக்கள் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில், ஜனநாயகத்தில் மக்கள் தங்களது அடிப்படை தேவைகள் குறித்து கேள்வி கேட்பது அவர்களின் உரிமை என்றும், பொது பிரச்சினைகள் குறித்து பொறுப்புடையவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மாஸ்டர் மகேந்திரனின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Listen News!