• Dec 27 2024

ஐஸ்வர்யா ராயுடனான விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

உலக அழகி என்ற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான   நடிகையாக காணப்பட்டார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியான இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மேலும் இவருக்கு புகழை  பெற்றுக் கொடுத்தது. தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

இவர் அமிதாப்பச்சனின் மகனும் முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் காணப்படுகின்றது.

அண்மை காலமே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்றதால் பிரச்சனை தீர்ந்தது என்று கூறப்பட்டது.


எனினும் இதைத்தொடர்ந்து சமீபத்தில் மும்பையில் நடந்த அம்பானியின் திருமண விழாவிலும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இதுவும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் உடனான விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கையில் அணிந்துள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டி 'ஸ்டில் மேரிட்' என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன். தற்போது இந்த தகவல் தீயாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement