• Dec 26 2024

வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நடிகர் யுகேந்திரன்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.எஞ்சியுள்ள இருவரில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக முதல் வார இறுதியிலேயே வெளியேறினார். இதையடுத்து நேற்று பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். 


பெண்கள் அவர்மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் .இதனால் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பிக்பாஸிலிருந்து இறுதியாக வெளியேறிய யுகேந்திரன் இது குறித்து கூறியுள்ளார்.


அதாவது பிரதீப் நீ மாஸ் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு பிக்பாஸ வீட்டை விட்டு வெளியேறும் போது கூட கப்பு முக்கியம் பிகிலு என்று சொல்லி யுகேந்திரனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement