• Dec 26 2024

நடிகை அமலாபாலுக்கு இரட்டை குழந்தையா? பசுமையான ஒரு போட்டோஷூட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் குழந்தை பிறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பசுமையான பச்சை உடையில் அவர் நிறைமாத கர்ப்பிணியுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கர்ப்பமானார்.

கர்ப்பமான சில மாதங்களில் இருந்து அவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் கர்ப்பிணி வயிற்றோடு அவர் ’ஆடு ஜீவிதம்’ படத்தின் ப்ரமோஷன் விழாவுக்கு சென்றது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் அமலாபால் தற்போது கர்ப்பமாகி ஒன்பதாவது மாதத்தில் இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சற்றுமுன் அவர் நிறைமாத கர்ப்பிணி தோற்றத்தில் பசுமையான உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது.

மேலும் அவருக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் ஒரு சிலர் அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement